×

வெங்கமேடு மேம்பால இறக்கத்தில் சாலை தடுப்பு கட்டையில் ரிப்ளக்டர் இல்லாததால் அடிக்கடி வாகன விபத்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கரூர், மே 10:  கரூர் வெங்கமேடு மேம்பால இறக்கத்தில் இருந்து வாங்கப்பாளையம் பிரிவு வரை சாலையின் மையப்பகுதியில் தடுப்புக் கட்டை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. மேம்பால இறக்கத்தை அடுத்து தடுப்புக் கட்டையின் முகப்பு பகுதியில் ஏற்கனவே, ரிப்ளக்டர் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வாகனம் ஓன்று, தடுப்பு கட்டையின் மீது மோதிய விபத்தில் ரிப்ளக்டர் உடைந்து விட்டது.அதற்கு பிறகு, இதில், புதிதாக ரிப்ளக்டர் பொருத்தாத காரணத்தினால், இரவு நேரங்களில் இரண்டு சக்கர வாகனங்களில் வரும் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.

இதே போன்று, வாங்கப்பாளையம் வரையிலான தடுப்புக் கட்டையின் பல இடங்களில் ரிப்ளக்டர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, வெங்கமேடு மேம்பால இறக்கத்தில் இருந்து துவங்கும் தடுப்பு கட்டை பகுதியில் ரிப்ளக்டர் பொருத்த தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : reporter ,road block stop ,Vengammedu ,
× RELATED பல்லடம் அருகே நிருபரை கொல்ல முயன்ற...